பகவத் கீதை, பக்தி ரசாமிருத சிந்து, உபதேசாமிருதம் மற்றும் வேதம் வழங்கும் அறிவு ஆகிய கிரந்தங்களை முறைப்படியும், ஆழமாகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
முக்கிய குறிப்புகள்:
சந்நியாசிகள் மற்றும் மூத்த பக்தர்களால் முறையாகக் கற்றுக்கொடுக்கப்படும்
இணையவழி வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள், ஆசிரியர்களுடன் உரையாடும் வசதி.
பயிற்சி மற்றும் நடைமுறை பிரச்சினைகளை அணுகும் விதமான கற்றலுடன் கூடிய பயன்பாட்டு இறையியல்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க தேர்வு ஆணையத்தால் சான்றளிக்கப்பட்டது
ரீல பிரபுபாதரின் பொருளுரைகளைப் படித்தல், ஆழமாகச் சிந்தித்து பிரதிபலித்தல், குழு விவாதம், கேள்வி பதில்
பதங்களின் பாராயணம் மற்றும் கற்றல்
மற்றும் பல…… இவையெல்லாம் அற்புதமான பக்தர்களின் சங்கத்தில்….
படிப்பில் சேருவதற்கான தகுதி:
தினமும் 16 மாலைகள் ஜபம் மற்றும் நான்கு விதிமுறைகளை பின்பற்றுதல்
உங்களைப் பற்றி நன்கு அறிந்த இஸ்கான் அதிகாரி தங்களை சிபாரிசு செய்யவேண்டும். மேலும் நீங்கள் குறைந்தது கடந்த 12 மாதங்களாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பிரச்சாரப் பணியில் உற்சாகமாக ஈடுபட்டு வருவதாக அந்த அதிகாரி சான்றளிக்க வேண்டும்.
வகுப்பு நடைபெறும் நேரம் ஆசிரியர்களின் வசதிக்கேற்பவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ மாற்றப்படலாம்
குறைந்தது 20 மாணவர்கள் சேர்ந்தால் மட்டுமே வகுப்புகள் துவக்கப்படும். 20 நபர்களுக்குக் குறைவானவர்கள் பதிவு செய்தால் மாணவர்கள் மற்றொரு மற்றொரு பேட்ச்சைத் (Batch) தேர்ந்தெடுக்கலாம். தற்போதே பதிவு செய்யுங்கள்